வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான பணிக்கு வரும் ஜனவரி 15-க்குள் டெண்டர் அறிவிப்பு

கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கை 4 மாதத்தில் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனவரி 15-க்குள் குப்பைகளை அகற்றுவதற்கான டெண்டர் விடப்படும் என கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது.

கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கை 4 மாதத்தில் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஜனவரி 15-க்குள் குப்பைகளை அகற்றுவதற்கான டெண்டர் விடப்படும் என கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 2003-ம் ஆண்டு முதல் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதில், குப்பைகள் முழுமையான அளவில் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. பல டன் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தக் குப்பைக் கிடங்களை மூட வலியுறுத்தியும், கிடங்கில் உள்ள பழைய குப்பைகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் ம.தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர் வே. ஈஸ்வரன், கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அப்போது, சுமார் 15.5 லட்சம் கன மீட்டர் பரப்பளவில் உள்ள பழைய குப்பைகள் ரூ. 99 கோடி செலவில் தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து நிதி பெற்று பயோமைனிங் முறையில் அழிக்க நகராட்சி நிர்வாக ஆணையத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி சார்பில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் முழுமையாக கையாளப்படுவதில்லை. மேலும் பழைய குப்பைகளை பயோமைனிங் முறையில் அழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, பழைய குப்பைகளை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயோமைனிங் முறையில் அழிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழு கண்காணிக்கும். குப்பைக் கிடங்கு செயல்பாடு தொடர்பான புகார்களை நீதிபதி ஜோதிமணி தலைமையிலான குழுவிடம் மனுதாரர் தெரிவிக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
 

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றுவது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையிலான கண்காணிப்புக்குழு தனது விசாரணையை இன்று தொடங்கியது. கோவை மாநகராட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, கண்காணிப்புக்குழு பல்வேறு உறுதிகளை அளித்துள்ளது.



அதாவது, 15.5 லட்சம் கன மீட்டர் பரப்பளவில் உள்ள பழைய குப்பைகளை ஜனவரி 15-க்குள் அகற்றுவதற்கான டெண்டர் விடப்படும். கோவையில் விரைவில் 64 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதில், 10 மையங்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். அதில், பயோமைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்படும். 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குப்பைகளை கையாளவும், அழிக்கவும் பணியமர்த்தப்படுவார்கள். திடக்கழிவுப் பொருட்களைப் பிரிப்பதன் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும், இவ்வாறு அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகளுக்கு :
https://www.youtube.com/watch?v=Zww9sr0q9So&feature=youtu.be

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...