கோவையில் டாக்டர் அம்பேத்கரின் 62-வது நினைவு தினம்

கோவை : கோவை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் டாக்டர் அம்பேத்கரின் 62 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை : கோவை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் டாக்டர் அம்பேத்கரின் 62 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இன்று அவருடைய 62 -வது நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச் சேர்ந்த 40 -க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்பு திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.



மேலும், 20 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி கோவையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மனு கொடுத்தும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக சமூக நீதிக்கட்சி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப் போலவே, பாரதியார் பல்கலைக்கழகத்திலும் டாக்டர். அம்பேத்கரின் உருவப்படத்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...