சென்னையில் போராட்டத்தின் போது நிருபர் மீது தாக்குதல் : ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

சென்னை : ம.தி.மு.க. நடத்திய ஆளுநர் முற்றுகை போராட்டத்தில் செய்தி சேகரித்து வந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை : ம.தி.மு.க. நடத்திய ஆளுநர் முற்றுகை போராட்டத்தில் செய்தி சேகரித்து வந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வைகோ தலைமையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ம.தி.மு.க.,வினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். பொதுமக்கள் சிலரும் இந்த போராட்டத்திற்கு வந்திருந்ததால், அதிகளவிலான மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலிருந்த தேநீர் கடையில் வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 



இந்த சம்பவத்தை ஆங்கில MIRROR NOW என்ற செய்தி தொலைக்காட்சி நிருபர் பிரமோத் மாதவ் செய்தியாக்க முயன்றார். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் செய்தியாளரை திடீரென தாக்கினார். அதில், பிரமோத்தின் கண்களில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் இது குறித்து புகார் அளித்தனர். தற்போது கிண்டி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நிருபர் பிரமோத்தை தாக்கியவர் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன. அவரது பெயர் சுரேஷ்பாபு எனவும், தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் என்றும் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு தி.மு.க. திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...