கோவையில் பிச்சைக்காரர் அடித்துக்கொலை : கொலை வழக்கின் கீழ் பெயிண்டர் கைது

கோவை : குனியமுத்தூர் பகுதியில் கல்லால் தாக்கியதில் ஆதரவற்றவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெயிண்டர் ஒருவரை, கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


கோவை : குனியமுத்தூர் பகுதியில் கல்லால் தாக்கியதில் ஆதரவற்றவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பெயிண்டர் ஒருவரை, கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் கடந்த 28-ஆம் தேதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அப்போது, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், காயத்துடன் கிடந்தவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் என்றும், அவரை மூவேந்தர் நகரைச் சேர்ந்த செல்வம் (37) என்ற பெயிண்டர் கல்லால் தலையை தாக்கியது தெரியவந்தது. 

சாலையோரம் படுத்து தூங்கிய பிச்சைக்காரரின் காலை மிதித்துள்ளார். இதனால், அவரை பிச்சைக்காரர் சத்தம் போட்டுள்ளார். ஆத்திரமடைந்த செல்வம் பிச்சைக்காரரின் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார். 

இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து செல்வத்தை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிச்சைக்காரர் இறந்தார். இதனால் இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் யார்..? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்று குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...