கோவை : சுமைதூக்கும் பணியாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட அட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது :- சொக்கம்புதூர் அருகே உள்ள பணைமரத்துபட்டியில் பக்ராக்ச்சா என்ற கண்ணாடி கல் நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் 15-க்கும் மேற்பட்ட சுமை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, அந்த நிறுவனம் மாதம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், பல ஆண்டுகளாக அங்கு பணியாற்றவர்களை தவிர்த்து வடமாநிலத்தவரை கொண்டு குறைவான ஊதியம் வழங்கி வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.
பல வருடங்களாக பணியாற்றியவர்களை தவிர்த்தது குறித்து நிர்வாகத்திடம் கேட்டோம். சுமைதூக்கும் பணியாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், சுமைதூக்கும் பணியாளர் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிடில், அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் நிறுவனங்களில் கண்டித்து ஒட்டுமொத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், இவ்வாறு தெரிவித்தனர்.