தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் மனு

கோவை : சுமைதூக்கும் பணியாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் மனு அளிக்கப்பட்டது.

கோவை : சுமைதூக்கும் பணியாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட அட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது :- சொக்கம்புதூர் அருகே உள்ள பணைமரத்துபட்டியில் பக்ராக்ச்சா என்ற கண்ணாடி கல் நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் 15-க்கும் மேற்பட்ட சுமை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, அந்த நிறுவனம் மாதம்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், பல ஆண்டுகளாக அங்கு பணியாற்றவர்களை தவிர்த்து வடமாநிலத்தவரை கொண்டு குறைவான ஊதியம் வழங்கி வேலைக்கு அமர்த்தி உள்ளனர். 

பல வருடங்களாக பணியாற்றியவர்களை தவிர்த்தது குறித்து நிர்வாகத்திடம் கேட்டோம். சுமைதூக்கும் பணியாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், சுமைதூக்கும் பணியாளர் குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இல்லாவிடில், அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் நிறுவனங்களில் கண்டித்து ஒட்டுமொத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...