கோவை : தனது குழந்தைகளையும் வளர்க்கவும், வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துதர வலியுறுத்தி கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
கோவை : தனது குழந்தைகளையும் வளர்க்கவும், வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்துதர வலியுறுத்தி கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த சாவித்திரி என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும், தனது கணவர் பத்ருசாமிக்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
எங்களுக்கு ஹரிணி, சுபாலட்சுமி இருபெண் குழந்தைகளும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். தற்போது, தன்னை கைவிட்டு தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதால், தனக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தான் காசநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கோ, குடும்ப செலவுகளுக்கோ பணம் அளிக்காமல் தங்களை புறக்கணிக்கிறார். இது குறித்து தனது கணவரின் பெற்றோர்கள் எதுவும் கண்டு கொள்வதில்லை.
மேலும், காவல்துறையினரிடம் மனு அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். வருமானம் இன்றி வாழ்ந்து வரும் தனக்கு குழந்தைகளை வளர்க்கவும், சிகிச்சை மேற்கொள்ள வழியில்லாமல் அவதிப்பட்டு வருவதால், தனது கணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.