இருதய நோய்கள் குறித்து கோவை KMCH மருத்துவமனையில் மாபெரும் மாநாடு : 250 இதய வல்லுநர்கள் பங்கேற்பு

கோவை : கோவை கே.எம் .சி.ஹெச் மருத்துவமனையில் இதய துடிப்பு மற்றும் இண்டர்வென்ஷனல் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவின் சார்பில் 2018-ம் ஆண்டிற்கான 3-வது கோவை ஹார்ட் ரிதம் மாநாடு இன்று நடைபெற்றது.


கோவை : கோவை கே.எம் .சி.ஹெச் மருத்துவமனையில் இதய துடிப்பு மற்றும் இண்டர்வென்ஷனல் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவின் சார்பில் 2018-ம் ஆண்டிற்கான 3-வது கோவை ஹார்ட் ரிதம் மாநாடு இன்று நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கோவையில் நடக்கும் சீரான இருதய மின்துடிப்பு பற்றிய கோவை ஹார்ட் ரிதம், இ பி அப்டேட் மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள பல இருதய நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர். 

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும், தேசிய அளவிலான புகழ் பெற்ற 25- க்கு மேற்பட்ட மருத்துவ கல்வியாளர்கள் பங்கேற்று, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடையே உரையாற்றினார்கள். 

இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், ’’ இருதய மின் துாண்டல் குறித்த ஒரு நாள் கல்வி கருத்தரங்காக இபி அப்டேட் ( EP Update ) அமையும். இருதய மின் தூண்டல் அடிப்படை மட்டுமின்றி, அதற்கு மேலும் அதிநவீன சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதில் இடம் பெறும். இருதயம் மெதுவாகச் செயல்படுதல், வேகமாகச் செயல்படுதலை மேலாண்மை செய்தல், இருதயத்தால் ஏற்படும் திடீர் மரணத்தைத் தடுத்தல், புதிய மருந்து மேலாண்மை, இருதயம் செயலிழத்தலை தடுக்கும் கருவிகள் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றி கருத்தரங்கில் விவாதித்தோம்," என்றார். 

 "எலெக்ட்ரோபிசியோலஜி துறை (Electrophysiology Department) ஆற்றும் அரும் பணி இப்போதைய காலத்திற்கு தேவை. இன்றைய மக்களின் வாழ்க்கை நோய்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கே.எம்.சி.எச் மருத்துவமனை நோயாளிகளுக்குத் இக்கால சூழ்நிலைக்கு கேற்ப சிகிச்சையை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படவேண்டியவை அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படவேண்டியவை அல்ல. அவற்றை அறுவைச் சிகிச்சை செய்யாமல் மருந்துகளினாலும் சரி செய்யலாம். " என கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...