கோவை மாநகராட்சியில் ரூ. 1.58 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 1 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 1 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

​இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



​கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86 பேரூர் பிரதான சாலை, கல்லாமேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வரிவசூல் மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியினையும், வார்டு எண்.86 அம்லு நகர், இந்திரா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் மற்றும் அல்அமீன் காலனி 1, 2, 3 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலும் மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளையும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.



​இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...