கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 1 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86 பேரூர் பிரதான சாலை, கல்லாமேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வரிவசூல் மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியினையும், வார்டு எண்.86 அம்லு நகர், இந்திரா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் மற்றும் அல்அமீன் காலனி 1, 2, 3 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலும் மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளையும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.