கோவை : பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணொருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 29). இவர் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து கைதாகும் காரணத்தால் போலீசார் அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி சாமநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கும்பலால் பிரவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சாமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முருகேசன் உள்பட 5 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தற்போது கொலையில் தொடர்பு இருப்பதாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் குமாரின் தாயார் சரசா என்கிற சரஸ்வதி (வயது 58), என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.