கோவையில் புதுப்பெண் தற்கொலை : கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கோவை : வரதட்சனை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : வரதட்சனை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சலீவன் வீதி சேர்ந்தவர் சங்கீதா( 25). இவருக்கு சாமியார் புதுவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயகண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 2 மாதத்தில் சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக சங்கீதாவின் தாய் முத்துலட்சுமி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, ஜெயகண்ணன் மற்றும் அவருடைய பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, சங்கீதாவின் கணவர் ஜெயகண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். 

ஜெயகண்ணன் பெற்றோர் உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...