கோவை : வரதட்சனை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சலீவன் வீதி சேர்ந்தவர் சங்கீதா( 25). இவருக்கு சாமியார் புதுவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயகண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 2 மாதத்தில் சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாக தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக சங்கீதாவின் தாய் முத்துலட்சுமி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, ஜெயகண்ணன் மற்றும் அவருடைய பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி, சங்கீதாவின் கணவர் ஜெயகண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
ஜெயகண்ணன் பெற்றோர் உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.