திருப்பூரில் தனியார் பேருந்தின் அசுர வேகத்திற்கு விவசாயி பலி : பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

திருப்பூர் : திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும்படியாக உள்ளது.


திருப்பூர் : திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும்படியாக உள்ளது. 

பல்லடம் - தாராபுரம் சாலை துத்தாரி பாளையம் பகுதியில் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் படியில் தொங்கி துத்தாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (45) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். 



தந்தூரிபாளையம் அருகே பேருந்து சென்றபோது, சாலையில் டிவைடர் வைக்கப்பட்டிருந்ததை அலட்சியப்படுத்தி ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கினார். இதில், பேருந்தில் பயணம் செய்த சின்னசாமி எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை காமநாயக்கன்பாளையம் போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதும், சின்னசாமி படியில் நின்று பயணம் மேற்கொண்டதும் உயிரிழப்பிற்குக் காரணம் என்பது தெரிய வந்தது. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...