உதகையில் சர்வதேச முதியோர் தினவிழாக் கொண்டாட்டம் : குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி நடனமாடிய முதியோர்கள்

நீலகிரி : சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான முதியவர்கள் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


நீலகிரி : சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான முதியவர்கள் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 



உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிர்ந்த பெற்றோர்களையும், முதியவர்களையும் போற்றும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று உதகை பிரிக்ஸ் பள்ளி அரங்கில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சர்வதேச முதியோர் தினவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அப்போது, முதியவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர், நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை முதியோர்கள் கண்டு ரசித்ததோடு, அவர்களும் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே, நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியது அனைவரையும் உருகச் செய்தது. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...