திருப்பூர் : டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மக்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு இந்த புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலையும் விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.