கோவை : போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கணபதி பகுதியைச் சேர்ந்த காளிக்குட்டி என்பவருக்கு சொந்தமான 1.58 ஏக்கர் நிலப்பத்திரத்தை போலியாக தயாரித்து கனரா வங்கியில் ரூ.49.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வின்சன்ட் சுரேஷ் பாபு, அவரது உறவினர் ரவிச்சந்திரன் மற்றும் பத்திர எழுத்தாளரான மோசஸ் ஆகிய 3 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. கடந்த 2005-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்ற போது, குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் வின்சன்ட் சுரேஷ் பாபு மற்றும் மோசஸ் ஆகிய இருவருக்கு ரூ. 35,000-மும், குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு ரூ. 30,000-மும் அபராதமாக விதிக்கப்பட்டது.