தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கண்டறிய சான்றிதழ் சரிபார்க்கும் பணி நாளை தொடக்கம்

கோவை : கோவை மாவட்டத்தில் தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கண்டறிய சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடங்குகிறது.

கோவை : கோவை மாவட்டத்தில் தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கண்டறிய சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடங்குகிறது.

 

கடந்த அக்டோபர் மாதம் கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார்  தற்காலிக பகுதிநேர ஆசிரியர்கள் உரியச் சான்றிதழ்கள் இல்லாமல் பணிபுரிகின்றனர். அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில முதன்மைக் கல்வி அலுவலருக்கு மனு அளித்தார். அந்த மனுவுடன் தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்ற போலி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அது தொடர்பான இதர தகவல்களையும் இணைத்திருந்தார்.

எஸ்.ஏ. ராஜ்குமாரின் மனுவின் சாரம் :- தற்காலிக பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் உரியச் சான்றிதழும் தகுதியும் இல்லாமல் அரசு பள்ளிகளில் வேலை செய்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆணையை மீறி தகுதியில்லாத ஆசிரியர்கள் பணியாற்றுவது அரசு நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பாடப்பிரிவுக்குத் தொடர்பில்லாத போலி பகுதிநேர ஆசிரியர்களை உரியச் சான்றிதழ்களை காட்டச் சொல்லி அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்

இதனைத் தொடர்ந்து, இன்று கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த கல்வி - அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை தொடங்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சான்றிதழ் சரிபார்க்கும் இப்பணியினை விரைந்து முடிக்க மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கோவையைச் சுற்றியுள்ள நான்கு கல்வி மாவட்டங்களுக்கும் 4 குழுக்கள் வீதம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...