கோவை : கோவை மாவட்டத்தில் தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கண்டறிய சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடங்குகிறது.

கடந்த அக்டோபர் மாதம் கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்கள் உரியச் சான்றிதழ்கள் இல்லாமல் பணிபுரிகின்றனர். அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில முதன்மைக் கல்வி அலுவலருக்கு மனு அளித்தார். அந்த மனுவுடன் தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்ற போலி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அது தொடர்பான இதர தகவல்களையும் இணைத்திருந்தார்.
எஸ்.ஏ. ராஜ்குமாரின் மனுவின் சாரம் :- தற்காலிக பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் உரியச் சான்றிதழும் தகுதியும் இல்லாமல் அரசு பள்ளிகளில் வேலை செய்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆணையை மீறி தகுதியில்லாத ஆசிரியர்கள் பணியாற்றுவது அரசு நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பாடப்பிரிவுக்குத் தொடர்பில்லாத போலி பகுதிநேர ஆசிரியர்களை உரியச் சான்றிதழ்களை காட்டச் சொல்லி அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்
இதனைத் தொடர்ந்து, இன்று கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த கல்வி - அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை தொடங்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சான்றிதழ் சரிபார்க்கும் இப்பணியினை விரைந்து முடிக்க மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சுற்றியுள்ள நான்கு கல்வி மாவட்டங்களுக்கும் 4 குழுக்கள் வீதம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.