தீண்டாமை வேலி இடத்தை ஆய்வு செய்ததில் பாரபட்சம் : நடவடிக்கை கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: அலகுமலையில் தீண்டாமை வேலி இடத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் குறைகளைக் கேட்பதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .


திருப்பூர்: அலகுமலையில் தீண்டாமை வேலி இடத்தை ஆய்வு செய்ய வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் குறைகளைக் கேட்பதில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கடந்தமாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழித்தடத்தை மறித்து ஒரு தரப்பினர் கம்பிவேலி அமைத்திருந்தனர் . இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தீண்டாமை வேலியின் ஒரு பகுதி அகற்றப்பட்டது . 



இதனையடுத்து, கடந்த 23-ம் தேதி அப்பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொள்வது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், இருதரப்பினரிடமும் முறையாகக் கருத்துக்களை கேட்க வேண்டிய அவர் கம்பி வேலி அமைத்த தரப்பினரை மட்டும் கோவிலுக்குள் அமரவைத்து ஆலோசனை நடத்தியதோடு அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலோசனைக்கூட்டத்திற்கு அனுமதிக்காமல் பாரபட்சமாக நடந்துள்ளார்.



தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுவழித்தடமாக பயன்படுத்தி வந்த இடம் அறநிலையத்துறைக்குச் சொந்தமில்லாத நிலையில், முன்னர் அமைத்த கம்பி வேலி அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் இரும்பு கேட் அமைக்கமுயற்சி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும், மனு அளிக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்காததால் பொதுமக்கள் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...