திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பனியன் தொழிலாளி கைது : 5 சவரன்நகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 

ஊத்துக்குளி சாலையில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருப்பூர் வடக்கு போலீசார், கடந்த ஜுலை மாதம் 18-ம் தேதி திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரும் ஒருவரே என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், காதர் பேட்டை பகுதியில் கடைகளில் பணம் திருடிய போது, அந்த பகுதியில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றும் கார்த்தி என்பவர் பல்வேறு பகுதிகளில் திருடி வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, கார்த்தியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகை, ரூ. 10,000 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...