கோவையில் ஐ.டி. துறையைச் சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 1.50 கோடி மோசடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

கோவை : வடவள்ளியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை : வடவள்ளியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வடவள்ளி பகுதியில் 'அட்லாண்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில், திட்ட மேலாளராகப்  பணிபுரிந்து வந்தவர் பசுலில்லாஹி. இவர் மீது ரூ. 1.50 கோடி மோசடி செய்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர் சதீஷ்குமார் இன்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது நிறுவனத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியை பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு தனது நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்து வந்த பசுலில்லாஹி காப்பிரைட் கொடுத்தாகத் தெரிவித்துள்ளார்.



இதனால், தனது நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டதோடு, தமக்கும் ரூ. 1.50 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும்,  இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...