கோவை : வடவள்ளியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வடவள்ளி பகுதியில் 'அட்லாண்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதில், திட்ட மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் பசுலில்லாஹி. இவர் மீது ரூ. 1.50 கோடி மோசடி செய்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர் சதீஷ்குமார் இன்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது நிறுவனத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியை பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு தனது நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்து வந்த பசுலில்லாஹி காப்பிரைட் கொடுத்தாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டதோடு, தமக்கும் ரூ. 1.50 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.