கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பிற்கு 4 பேர் பலி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி காவிரி (40). இவர் கடந்த 19-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி மலையம்மாள் (70). இவரும் மர்ம காய்ச்சலினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.

அன்னூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமியின் மகன் பேச்சியண்ணன் (73). இவர் கடந்த 21-ஆம் தேதி பன்றி காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த ராமசாமியின் மனைவி அன்னபூர்ணி (60). இவர் காய்ச்சல் பாதிப்பில் 

கடந்த 13-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இன்று மாலை 3:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...