நீலகிரி : உதகை தினசரி மார்க்கெட் சந்தையில் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வியாபாரிகள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் சந்தையில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கடைகளின் வாடகையை உயர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், தற்போது வழங்கப்பட்டு வரும் வாடகையை விட பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், தற்போதைய வாடகையை விட 50 சதவீதம் அதிகமாக வழங்க வியாபாரிகள் முன்வந்தனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் அதனை ஏற்றுக் கொள்ளாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் ஒன்றிணைந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சந்தையில் 313 கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, திடீரென வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் ஒன்று கூடினர். இதனால், சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெகுநேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.