பாலியல் பலாத்கார வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் தலைமையில், துணை ஆணையாளர்கள் டாக்டர்.பாலாஜி சரவணன், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள், நிலுவையிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள், போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பேசியதாவது:- 

நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

புகார் கொடுக்க வரும் மக்களை அலைக்கழிக்கக் கூடாது. பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...