திருப்பூர் : தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் சாதி மறுத்துக் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படுகொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும், இது போன்ற சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும், மேலும், சாதி ஆணவ கொலைகளில் ஈடுபடுபவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவப்படுகொலைகள் நடந்தும் தமிழக அரசு மவுனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.