கோவை : நாடு முழுவதும் இருக்கும் யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் யானைகள் தொடர்ந்து உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவற்றின் வழித்தடங்களை அங்கீகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பிரதீப் குமார் பூயன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது :- யானைகள் வழித்தடம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு தற்போது நேரடியாக உத்தரவிடுகிறேன். நாடு முழுவதும் இருக்கும் யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பான முடிவை 2 வார காலத்திற்குள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறினார்.
இதனிடையே, லைல்டு லைஃப் டிரஸ் ஆஃப் இந்தியாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில், '70 சதவீதத்திற்கும் அதிகமான யானை வழித்தடங்கள், பட்டா நிலங்கள் போன்ற வனத்துறைக்கு சொந்தமில்லாத பகுதிகளில் வருகிறது. இதனை மீட்பது அரசுக்கு கடும் சவாலான காரியம்,' எனக் குறிப்பிட்டுள்ளது.
யானை வழித்தடங்கள் முறையாக அங்கீகரிக்கப்படாததால், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் உயிரிழப்புகள் அதிகரித்துக் காணப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனித - யானை மோதல் சம்பவங்கள் ஏற்படுவதாகவும், ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதும், உயர்மின் அழுத்தம் மற்றும் மின்கம்பிகளில் சிக்கியும் யானை உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.