பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம்

கோவை: பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் இணைய பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும் லுசிடியஸ் நிறுவனமும் இணைந்து இணையதளத்தையும் ஸ்மார்ட் உபகரணங்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று (சனிக்கிழமை) கோவை ரெசிடன்சியில் நடத்தியது.

கோவை: பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் இணைய பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும் லுசிடியஸ் நிறுவனமும் இணைந்து இணையதளத்தையும் ஸ்மார்ட் உபகரணங்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று (சனிக்கிழமை) கோவை ரெசிடன்சியில் நடத்தியது.



இதில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் பேசுகையில், "சமீப காலங்களில் மனித வாழ்க்கையை சுலபமாக ஆக்கிட பல தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை உபயோகப்படுத்துவதில் ஒரு சில அபாயங்களும் உள்ளன. குறிப்பாக இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்துவதற்கு சில பாதுகாப்பு முறைகளும் அவசியமாகின்றன." என்றார்.



விழாவில் தலைமை வகித்த கோவை மண்டல டிஐஜி ஜி. கார்த்திகேயன் பேசுகையில், "இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 12,317 சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சைபர் பாதுகாப்பிற்காக அரசும், தனியார் நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சைபர் உலகின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்." என்றார்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சுமித் சரண் பேசுகையில், "இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு 46.5 கோடியாக உயர்ந்துள்ளது. அரசாங்கமும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற பல கணினி சேவைகளால் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது." என்றார்.



நிகழ்ச்சியில், லுசிடியஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் தியாகி சைபர் குற்றங்கள் நடைபெறுவதை செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார். அவர் டென்மார்க்கில் உள்ள விமானநிலையத்தில் உள்ள ஒரு காமிராவின் மூலம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காண்பித்து சைபர் குற்றத்தை பற்றி விவரித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...