நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை பகுதியில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

கோத்தகிரி அருகிலுள்ள கொட்டகம்பை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிவண்ணன் (29). இவரது மனைவி கவிதா (24). இவர்களுக்குத் திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு மதுஸ்ரீ என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். மேலும், கவிதா தனது மாமனார் கணேசன் (58) மாமியார் சரோஜா (52) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த மற்றொரு அறையில் கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவிதாவை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருச்சி துறையூர் வைரசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் கவிதாவின் அண்ணன் செந்தில்குமார் (30) கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிவண்ணன் - கவிதா தம்பதியினருக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் கோத்தகிரிக்கு சென்று மணிவண்ணன் பெற்றோர் மற்றும் கவிதாவின் அண்ணன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அவருடன் குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.