கோவையில் அடுத்தடுத்து கைப்பற்றப்படும் போதை வஸ்துக்கள் : ரங்கே கவுண்டர் வீதியில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டம் ரங்கே கவுண்டர் வீதியிலுள்ள உள்ள தனியார் குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 500 கிலோவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவை மாவட்டம் ரங்கே கவுண்டர் வீதியிலுள்ள உள்ள தனியார் குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 500 கிலோவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பான்மசாலா, குட்கா பொருட்களை முழுவதும் அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதில், கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கிலோ கணக்கிலும், டன் கணக்கிலும் பறிமுதல் செய்யப்படுகிறது.



பொன்னையா ராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், சுமார் 450 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 



இந்த நிலையில், ரங்கே கவுண்டர் வீதியில் இன்று 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். காலை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள இமான்படை சந்து பகுதியில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து, அதிகாரிகள் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

கோவையில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...