உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம், கஜா புயலா..? அல்லது அரசியல் புயலா..? : ஜி.கே. வாசன் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம், கஜா புயலா..? அல்லது அரசியல் புயலா...? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம், கஜா புயலா..? அல்லது அரசியல் புயலா...? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கஜா புயலால் தேர்தல் தள்ளிப் போகிறதா அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை தமிழக மக்களைப் பொருத்தவரை மத்திய அரசு பயனில்லாமலே இருந்து வருகிறது என திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். 

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களே பலம் வாய்ந்தவர்கள். மக்களே பலத்தை முடிவு செய்ய வேண்டியவர்கள். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. 

எனவே, மத்திய அரசு தமிழக மக்களைப் பொருத்தவரை பயனில்லாமலே இருந்து வருகிறது. எனவே, பலம் என்பது மக்கள் அரசின் மீது கொண்டுள்ள அபிப்ராயம் தான். ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி சதி, நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசு இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கான தண்டனையை குறுகிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சல் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழக அரசு தீவிர முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

நியாயமாக நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். அது நடைபெறுமா..? நடைபெறாத..? என்ற நிலையே உள்ளது. 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் அதற்கு மழை அதிகமாக பெய்கிறதா..?, வெயில் அதிகம் அடிக்கிறதா..?, என்பது எங்களுக்கு தெரியவில்லை. கஜா புயலால் தேர்தல் தள்ளிப்போக போகிறதா..? அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வரும் நவம்பர் 25-ம் தேதி அரியலூரில் நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...