டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தும் வகையிலான சட்டவிதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

வாகன ஓட்டிகளின் வசதிக்காக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை கேட்கும் போது, எம்-பரிவாஹன் செயலி, டிஜிலாக்கர் ஆகியவற்றின் மூலம் அவற்றை காண்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வாறு காண்பிக்கப்படும் போது, அதனை போலீசார் ஏற்க மறுப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, மத்திய போக்குவரத்து விதி எண் 139-ன் கீழ் புதிய சட்டவிதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களது ஆவணங்களை எம்-பரிவாஹன் செயலி, டிஜிலாக்கர் ஆகியவற்றின் மூலம் போலீசாரிடம் காண்பித்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த ஆன்லைன் ஆவணங்களில் வாகனத்தின் பதிவுநாள், காப்பீடு, தரம் , பெர்மிட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ளடக்கி இருக்கும். இதன்மூலம், வாகன ஓட்டுநர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இந்த விதியின் மூலம் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன வாகனங்களை, அடுத்த ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, 138பி விதியின் கீழ் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், முறையாக அதனை மூடாமல் கொண்டு செல்வது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.