Exclusive: தீபாவளிக்கு 4.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய கோவை அரசு போக்குவரத்து கழகம்

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை தினமும் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளி அன்று மட்டும் 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனிடையே, நவம்பர் 1 முதல் நவம்பர் 6 வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதே போல் நவம்பர் 7 முதல் 12 -ம் தேதி வரை இயக்க பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. ஆக மொத்தம் தீபாவளியையொட்டி இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலம் 4.5 கோடி அரசு போக்குவரத்து கழகம் கோவைக்கு வருமானம் கிடைத்துள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சுமார் 15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டினை காட்டிலும் இந்தாண்டு பேருந்துகளும் அதிகம் வருமானமும் அதிகம்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...