கோவை : குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை வரை வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் வீடுகளை அகற்றம் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிய மக்கள் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகளும் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், காலஅவகாசம் கோரி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
கடந்த வாரம் மக்கள் குறைதீர்ப்பு நாளில் உக்கடம் பை-பாஸ் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்திருந்தனர். இவர்களுக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், காலஅவகாசம் கோரி மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், 10-வது வார்டு வ.உ.சி வீதி, பெரியார் நகர் மக்கள் தங்களது குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய இருப்பிடத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு 15 கி.மீ. தூரம் இருக்கிறது. மேலும், தற்போது பயிலும் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வருவதில் சிரமம், மாற்று சான்றிதழ் பெற்று வேறு அரசு பள்ளியில் சேர்ப்பதில் காலதாமதம் மற்றும் வேலைக்குச் சென்றுவருவதில் இடையூறு போன்ற இன்னல்கள் உள்ளன.
எனவே, தங்களது குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை தற்போது வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி வழங்க வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.