நீலகிரி மலைரயில் என்ஜின் பழுது; சுற்றுலா பயணிகள் பாதி வழிக்கு மேல் பேருந்து மூலம் அனுப்பி வைப்பு

நீலகிரி: நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஞாயிற்றுக் கிழமை பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


நீலகிரி: நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஞாயிற்றுக் கிழமை பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நீலகிரி மலை ரயில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்கிறது. அதில் பயணம் செய்யும் பயணிகள் புளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை உட்பட பிற இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலை ரயில் என்ஜின் பழுதடைந்ததால் குன்னூர் ரயில்வே பொறியாளர்கள் குன்னூரில் உள்ள லோகோ ஷெட்டில் வைத்து பழுது பார்த்து என்ஜினை சூடேற்றினர்.

பின்னர் பெட்டிகள் பொருத்தப்பட்டு மலை ரயிலை இயக்கினர். குன்னூரிலிருந்து சிறிது தூரம் சென்றதும் மீண்டும் என்ஜின் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் ஊழியர்கள் மெதுவாக ரயிலை இயக்கி காட்டேரி ரயில் நிலையம் வரை கொண்டு சேர்த்தனர். மேலும் ரயிலை இயக்க முடியாது என்பதால் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 

இதை தொடர்ந்து குன்னூர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி இரண்டு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு ரயிலில் இருந்த 210 பயணிகளையும் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தனர் இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. தினந்தோறும் இயக்கப்படும் ரயில் என்ஜின் பராமரிப்பு பணியில் இருந்ததால் வேறு என்ஜின் இயக்கப்பட்டதால் தான் இது போன்று ஆனது என்று ஊழியர்கள் கூறினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...