கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : ரூ. 48,000 பறிமுதல்

கோவை: கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை பாலசுந்தரம் சாலையிலுள்ள மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றும் அலுவலர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பிரபாகரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 



அப்போது, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜசேகரனிடம் நடத்திய விசாரணையில், அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்து 31 ஆயிரம் ரூபாய் மற்றும் அவரது மேஜையின் கீழே 2,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மற்றொரு அதிகாரியான லெனினிடமிருந்து 14,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...