திருப்பூரில் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம் : நடவடிக்கை இல்லையேல் போராட்டம் நடத்துவதாக மக்கள் எச்சரிக்கை

திருப்பூர் : திருப்பூரை அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரை அடுத்த முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 300-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால், மழை நீருடன், கழிவு நீரும் தேங்கிய நிலையில் உள்ளதால் இப்பகுதியைச் சுற்றியும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதனிடையே கடந்த ஒரு வார காலத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருந்து வகைகளை கூட இங்கு தெளிக்கவோ அல்லது துப்புரவு பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் நகராட்சி முற்றுகை, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...