குறைந்த போனஸ் வழங்கியதாக குன்னூர் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்கள் மனு

நீலகிரி: குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல் 8.33 சதவீதம் போனஸ் வழங்கியுள்ளதாக கூறி தொழிலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

நீலகிரி : குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல் 8.33 சதவீதம் போனஸ் வழங்கியுள்ளதாக கூறி தொழிலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.



குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் 20 சதவீதம் வழங்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 8.33 சதவீதம் போனஸ் வழங்கிவருவதாகவும், இந்தாண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் 8.33 சதவீதம் மட்டுமே தோட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாகவும் புகார் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.



மேலும், நிர்வாகத்திற்காக மழை மற்றும் குளிர் என்று பார்க்காமலும், அட்டைப் பூச்சி கடி மற்றும் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கிடையே பணி செய்தும் வரும் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 



மேலும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் மற்றும் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...