சங்கனூர் பகுதி பெரியார் நகரில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மனு

கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் பகுதி பெரியார் நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் பகுதி பெரியார் நகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

சங்கனூர் பகுதி பெரியார் நகரில் ஓடையை ஒட்டி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவர்கள் வசித்து வரும் இடங்களை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 

அதில் கூறியிருப்பதாவது :- தாங்கள் அப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக செலுத்தி வரும் இவர்களுக்கு, மாற்று இடம் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கைகள் எடுக்காமல், வரும் 16-ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...