நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிரிடப்பட்டு குறைந்த நாட்களே ஆன காய்கறிகளை விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.அதேபோல கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக வலுப்பெற்று உள் மாவட்டங்களில் பருவ மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் நீலகிரியில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசியான நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உருளைக்கிழங்கு,பீன்ஸ் முட்டைகோஸ்,மேரக்காய்,பீட்ரூட், முள்ளங்கி போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.இங்கு விளையும் காய்கறிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கர்நாடகா,கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இப்படியிருக்க நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக காய்கறிகள் பரவலாக விளைச்சல் கண்டிருந்தாலும் இவைகள் இன்னும் முழு வளர்சியை அடையவில்லை.இவைகள் முழு வளர்ச்சி அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும்.ஆனால் அதற்குள் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஏற்படும் என்பதால்,காய்கறிகள் அழுகிவிட வாய்ப்புகள் உள்ளது.இதனால் தற்போது விளைந்துள்ள காய்கறிகளை விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருகின்றனர்.

அதேபோல இந்த காய்கறிகள் முழு வளர்ச்சி அடையாததால் சந்தைகளில் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. இருப்பினும் வேறுவழியின்றி விவசாயிகள் அவசரகதியில் அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.