கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று ஏர் அரேபியாவுக்கு சொந்தமான விமானம் வந்தது. அதில், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுடான் பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் அகமது இஷாக் முஸா (38) என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், சட்டவிரோதமாக, உரிய ஆவணங்கள் இன்றி 5 தங்கக் கட்டிகளும், தங்கத்தினால் ஆன பெல்ட் பக்கிளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, 2 செல்போன்களும், லெதர் பெல்ட்டும் கைப்பற்றப்பட்டது.
761.200 கிராம் எடை கொண்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.24,96,736 என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹபீஸ் அகமது கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.