கோவை : டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேரும் என மொத்தம் 77 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர், மருத்துவமனையின் டீன், இருப்பிடம் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் இருந்தனர். இதனிடையே, டெங்கு காய்ச்சலால் மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.