கோவை : பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தில் அழகான கோவையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசால் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் வகையில், தங்களது வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவலைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை எடுத்து வர, துருப்பிடிக்காத எவர்சில்வர் பாத்திரங்கள், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்கு மட்டைகள், துணிப்பைகள், சணல்பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் இல்லா ஆசார தமிழகத்தில், அழகான கோவையை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுப்போம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.