கோவை கணபதி அருகே திருமண மண்டப கட்டுமானம் இடிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் படுகாயம்

கோவை : கணபதியை அடுத்த விநாயகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

கோவை : கணபதியை அடுத்த விநாயகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். 



கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இவர் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்த திருமண மண்டப கட்டிட பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று மாலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 



அதில், பணியில் இருந்த 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும், மீதமுள்ள 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...