4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள 4 வயது சிறுமி நேற்றைய தினம் மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதையடுத்து, காலை 5 மணியளவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மாலை வரை சிகிச்சை அளிக்காமல் கால தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அனைத்துக் கட்சியினரும் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகாரளித்த பின்பே, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளனர். 



இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் உள்பட அனைத்து சங்கத்தினர் சார்பிலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மாவட்ட மருத்துவ இணை இயக்குனரிடம் மனு அளித்தனர். மேலும், அனைத்திந்திய மாதர் சங்கம், தேசிய மாதர் சங்க சம்மேளனம் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையையும், அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...