தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு

கோவை : தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை : தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மாவட்டத்திற்கு தலா ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகளாக மாற்றும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி, கோவை மாவட்டத்தில் மாதிரி பள்ளியாக அசோகபுரம் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. விரைவில் பணிகள் முடிவுபெற்று கோவை மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக அசோகபுரம் மேல்நிலைப் பள்ளி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்," இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் உயர்தர வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், சி.சி.டி.வி. வசதி, சோலார் விளக்குகள், மைதானங்கள், ஃபபர் பெஞ்சுகள், ஊட்டச்சத்து வளர்ச்சிக்கான வசதிகள் உள்ளிட்டவை சுமார் ரூ. 26 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்திற்காக, மாநில அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது நிதிகளை ஒதுக்க வேண்டும்," எனக் கூறினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...