நீலகிரியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது மருத்துவ குழுவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது மருத்துவ குழுவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது :- இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் டெல்லி, பீகார், பெங்களுர் போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் போது அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பி வருவதால் அங்கிருந்து இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் இருந்து வந்த ஒரு மாணவியிடம் இருந்து இந்த காய்சல் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் 3 பேரும், பள்ளியின் சார்பில் ஒருவரும் மொத்தம் நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சந்தேகிக்கப்பட்ட 10 மாணவ, மாணவியர்களை அனுமதித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த பன்றிக்காய்ச்சல் மேலும் மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்காக, இவர்கள் 10 பேரும் பள்ளியின் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தீபாவளி விடுமுறை தொடர்ந்து வரும் சூழலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த அனைத்து சோதனை சாவடிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...