கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக இலவச ஆடைகள் மையம் திறப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச ஆடைகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச ஆடைகள் மையம் தொடங்கப்பட்டுள்ளது.



கோவை அரசு மருத்துவமனையில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் (யுவா) சார்பில் இலவச ஆடைகள் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இவ்வமைப்பினர் தீபாவளி பண்டிகைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக துணிகள் வழங்குவதை தொடங்கியுள்ளனர். இந்த மையம் வருடம் முழுவதும் செயல்படும் எனவும், ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த மையம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.



ஏற்கனவே, இந்த அமைப்பின் சார்பாக உள்நோயாளிகளுக்கு சானிட்டரி நாப்கின் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ்வமைப்பினர் தற்போது தீபாவளிக்கு ஏழை எளிய நோயாளிகளுக்குப் புத்தம் புதிய ஆடைகள் வழங்க முடிவெடுத்திருப்பது நோயாளிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் தொடங்கி வைத்தார். இதில், மருத்துவமனையின் முதல்வர் அசோகன், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...