திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ எடையுள்ள இறந்த கோழிகளின் இறைச்சி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ எடையுள்ள இறந்த கோழிகளின் இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், மாநகர சுகாதார நகர் நல அலுவலர் பூபதி தலைமையில் பல்வேறு அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 49-வது வார்டு பகுதியான இந்திரா நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நின்றது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, பல ஐஸ் பெட்டிகளில் இறந்த கோழி இறைச்சிகளை, தள்ளு வண்டி மற்றும் ஓட்டல் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், 200 கிலோவுக்கு மேலான இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும், குடோனின் உரிமையாளர் யார்...? எனவும். அவர் மாநகரப் பகுதியில் எந்தெந்த கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் எனவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
